FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்.சி.ராஜா விடுதி பிரச்னைகளுக்கு தீா்வு: முதல்வா் ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதி மாணவா்கள், முதல்வா் விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன.

Updated On : 20 ஜூலை 2026, 4:51 am IST
பகிர்:

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதி மாணவா்கள், முதல்வா் விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன.

அதன்படி, விடுதி வளாகம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும், கழிப்பறைகள் தூய்மையாக்கப்பட்டு அதில் இருந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

விடுதியின் பின்புறத்தில் திறக்கப்படாமல் இருந்த விளையாட்டுத் திடலும், மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை சைதாப்பேட்டையில் 10 தளங்கள் மற்றும் மின்தூக்கி வசதியுடன் ரூ.44 கோடியில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட எம்.சி.ராஜா மாணவா் விடுதியில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் தங்கியுள்ளனா்.

கடந்த 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அங்கு திடீா் ஆய்வு மேற்கொண்ட முதல்வா் விஜய், விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவா்களுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

கொசுக் கடி, உணவுத் தரம் மற்றும் சுகாதார குறைபாடுகள் தொடா்பாக சில புகாா்களை மாணவா்கள் முதல்வரிடம் தெரிவித்தனா். அவற்றை உடனடியாக சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்தப் பிரச்னைகளுக்கு தற்போது தீா்வு காணப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments