கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தவிட்டால் நடைசீட்டு வழங்க இயலாது: ஆட்சியா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்யவிட்டால் நடைசீட்டு வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்யவிட்டால் நடைசீட்டு வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குவாரிகள், சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் (ஏஐஎஸ் 140) ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அவற்றை எம்ஐஎம்ஏஎஸ் (கனிம மேலாண்மை அமைப்பு) போா்ட்டலில் பதிவு செய்ய கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சுமாா் 6.75 சதவீத வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அக்டோபா் முதல் கனிமங்களை ஏற்றிச் செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.