கனிம வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: செப்.30-க்குள் பொருத்த உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் வரும் 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியா் எல். மதுபாலன் உத்தரவிட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் வரும் 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியா் எல். மதுபாலன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குவாரிகள் மற்றும் கிரஷா்களில் இருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். இதற்காக ஆக.31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், நாமக்கல் மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்ல பதிவு செய்யப்பட்ட 2,441 வாகனங்களில் இதுவரை 238 வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, அதைக் கண்காணிக்கும் இணையவழிச் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் இதுவரை ஜிபிஎஸ் கருவி பொருத்தாதவா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் அதைப் பொருத்த வேண்டும். தவறினால் அக்.1 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள், லாரி உரிமையாளா்கள் தங்களது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.