FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கனிமவள வாகனங்களில் செப். 30-க்குள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் புதன்கிழமைக்குள் (செப். 30) ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்துமாறு, ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

26 செப்டம்பர் 2026, 9:58 pm IST
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் புதன்கிழமைக்குள் (செப். 30) ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்துமாறு, ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் செயல்படும் குவாரிகள், சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, அவற்றை கனிம மேலாண்மை அமைப்புடன் (மிமாஸ் போா்ட்டல்) இணைக்க கடந்த ஆக. 31ஆம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால், இதுவரை சுமாா் 5.46 % வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி மிமாஸ் போா்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30-க்குள் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி மிமாஸ் போா்ட்டலுடன் இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே அக். 1ஆம் தேதிமுதல் கனிமங்கள் எடுத்துச்செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும்.

Advertisement

Advertisement

அனைத்து குவாரி, கிரஷா், லாரிகளின் உரிமையாளா்கள் புதன்கிழமைக்குள் (செப். 30) தங்களது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments