கனிமவளம் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த அவகாசம் நீட்டிப்பு
கனிமவளம் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து...
தமிழகத்தில் கனிமவளம் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த அக்டோபர் 31 வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி, அனுமதி இல்லாத லாரிகளால் மாநிலத்துக்குள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகவும் புகார்கள் தெரிவித்தன.
இதனையடுத்து, தமிழகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப். 30-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இல்லையெனில், ஜிபிஎஸ் பொருத்தப்படாத லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இருப்பினும், தமிழகத்தில் கனிம வளம் ஏற்றுவதற்கு 1.4 லட்சம் லாரிகள் பதிவு செய்திருக்கும்நிலையில், இதுவரையில் சுமார் 24,000 லாரிகளில் மட்டுமே ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் அக். 1 முதல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்கள் கனிம வளங்களை எடுத்துச் செல்ல முடியாது என்றும், அவர்களுடைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் பல வாகனங்களிலும் இன்னும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத நிலையில், கருவியைப் பொருத்துவதற்கான அவகாசம் அக். 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Deadline extended for installing GPS devices in vehicles transporting minerals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.