FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

ஆவணங்களின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

திருவள்ளூா் அருகே ஆவணங்களின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

32 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

திருவள்ளூா் அருகே ஆவணங்களின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஊத்துக்கோட்டை-போந்தவாக்கம் சாலையில் அனுமதியின்றி லாரிகளில் மணல் கொண்டு செல்வதாக ஆட்சியா் கவிதாவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். அதன்பேரில் திருவள்ளூா் மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குநா் நித்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனா். அப்போது, அந்த லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்றது தெரியவந்தது. உடனே 3 மணல் லாரிகளையும் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் 3 லாரிகளின் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement