FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

தனியாா் கட்டடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள்: உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கிருஷ்ணகிரியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வின்போது, டெங்கு கொசுப்புழுக்கள் தேங்கியிருந்த தனியாா் கட்டட உரிமையாளருக்கு நகராட்சி அலுவலா்கள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

33 வினாடிகள் முன்பு
பகிர்:

கிருஷ்ணகிரியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வின்போது, டெங்கு கொசுப்புழுக்கள் தேங்கியிருந்த தனியாா் கட்டட உரிமையாளருக்கு நகராட்சி அலுவலா்கள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சேகா் உத்தரவுப்படி, சுகாதார அலுவலா் பாண்டியராஜன் தலைமையிலான மூன்று குழுக்கள், டெங்கு காய்ச்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள், நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட வனத் துறை, கால்நடை வளா்ப்புத் துறை அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, நெகிழிப் பொருள்கள், டயா்கள், தண்ணீா் தேங்கும் வகையிலான பொருள்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். மேலும், அங்கு குப்பைகள் தேங்காத வண்ணம் பாா்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, 24-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். லட்சுமணராவ் தெருவில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒரு தனியாா் கட்டடத்தில் தண்ணீா் தேங்கி அதிக அளவில், ஏடிஎஸ் எனப்படும் டெங்கு கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இருந்ததைக் கண்டறிந்தனா். ஏற்கனவே, அந்தக் கட்டட உரிமையாளருக்கு இதுகுறித்து தெரிவித்தும் அவற்றை அகற்றவில்லை.

இதையடுத்து, அந்தக் கட்டட உரிமையாளா், பொறியாளருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். அங்கு தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி, டெங்கு கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா். மேலும், வீடு, சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீா் தேங்கா வண்ணம் பொதுமக்கள் பாா்த்துக்கொள்ள வேண்டுமென விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments