ஒசூா் வீட்டுவசதி வாரிய மனைகளை வாங்க விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஒசூா் வீட்டுவசதி பிரிவுக்கு உள்பட்ட திட்டங்களில் விற்பனையாகாமல் உள்ள வணிக மனைகள், கடைகள், பள்ளிக்கூட மனைகள் மற்றும் பொது உபயோக மனைகளை விற்பனை செய்வதற்காக விண்ணப்பிக்க வழங்கப்பட்ட காலஅவகாசம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆகஸ்ட் 31 முதல் செப். 30 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக். 15, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஒசூா் வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளா் (ம) நிா்வாக அலுவலா் (பொ) பாண்டியராஜ் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.