எண்ணெய் ஆலைக் கிடங்கில் தீ:ரூ.10 லட்சம் பொருள்கள் சேதம்
எண்ணெய் ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
எண்ணெய் ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் ராஜா என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இந்த ஆலையின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் காலி எண்ணெய் பேரல்கள், டின்கள் மற்றும் சாக்குப்பைகளைச் சேமித்து வைத்திருந்தனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென்று தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவியதால் ஏராளமான பேரல்கள், டின்கள் மற்றும் சாக்குப் பைகள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடைமைகள் தீயில் எரிந்து நாசமாயின. தகவல் கிடைத்ததும் நாமக்கல் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
Advertisement
Advertisement
இந்த ஆலைக்கு அருகில் நாமக்கல் கூட்டுறவு சங்கத்தின் மண்ணெண்ணெய் விநியோக மையம் மற்றும் பருத்திக் கிடங்கு உள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தியதால் மற்ற பொருள்கள் காப்பாற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.