FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த அறிவுறுத்தல்

நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டத் தொழிலாளர் ஆய்வாளர் மஞ்சள்நாதன் வெளியிட்ட செய்தி: கடைகள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நிறுவனங்களை ஆய்வு செய்யும் தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆய்வுகளின் போது குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொழிலாளர்களின் ஊதியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்துமாறு தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

இதனால் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணப் பயன்களை வங்கி மூலமாகவே வழங்க வேண்டும்.

மேலும், தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது கண்டறியப்படுகிறது. இத்தொழிலாளர்களுக்கும் வங்கி மூலமாகவே ஊதியம் உள்ளிட்ட பணப் பயன்கள் வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களும் வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தெரிவிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் இந்த நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments