நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் எஸ். காந்திசெல்வன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் ரா. உடையவர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவை முன்னிட்டு கோவையில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டம் தொடர்பாகவும், பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி நடத்துவது குறித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பாகவும் மற்றும் கட்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
எனவே, இக் கூட்டத்தில் மாநில, மாவட்டக் கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி செயலர்கள், மாவட்ட அளவிலான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.