பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு குறைந்த காப்பீட்டுத் தொகை வசூலிக்க வலியுறுத்தல்
குறைந்த நேரமே இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு குறைந்த காப்பீட்டுத் தொகை வசூலிக்க வலியுறுத்தப்பட்டது.
குறைந்த நேரமே இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு குறைந்த காப்பீட்டுத் தொகை வசூலிக்க வலியுறுத்தப்பட்டது.
திருச்செங்கோடு சேலம் சாலையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தின் புதிய கோட்ட அலுவலக திறப்பு விழா புதன்கிழமைநடைபெற்றது.
கோட்ட மேலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். கோவை துணை பொது மேலாளர் சைலஜா சீனிவாசன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கோவை மண்டல மேலாளர் ராஜன், துணை மேலாளர் பூர்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல மேலாளர் ராஜன் பேசியது: கடைக்கோடி இந்தியனுக்கும் காப்பீட்டு சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசின் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. லாப நோக்கை மட்டுமே கருதாமல் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை தீர்த்து தொழில் முறிந்து போகாமல் பாதுகாக்கின்றன.
திருச்செங்கோடு கோட்டம் ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி அளவுக்கு தொகை வசூலித்து சிறப்பாக செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி வசதியான கட்டடத்துக்கு கோட்ட அலுவலகம் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பாரி கணேசன் பேசுகையில், இழப்பீடு வழங்கும்போது 80 சதவீதத்துக்கு மேல் வழங்கினால்தான் லாரி மற்றும் ரிக் உரிமையாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார். எலச்சிபாளையம் ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளி தாளாளர் சந்திரசேகர் பேசுகையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆண்டுக்கு 260 நாள்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதுவும் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே அவற்றுக்கு குறைந்தளவு காப்பீட்டுத் தொகை வசூலிக்க வேண்டும் என்றார்.
விழாவில் நாமக்கல் கோட்ட மேலாளர் பன்னீர் செல்வம், ஈரோடு கோட்ட மேலாளர் ராதா கிருஷ்ணன், வணிக அதிகாரி பொன்.கோவிந்தராஜ், வழக்குரைஞர் பரணீதரன், அண்ணாதுரை, ரவி, சோமு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.