FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.   இதில் 200- க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து
கொண்டனர்.
ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கலந்த பொருள்களைப் பயன்படுத்தத் தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.   இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு தனியார் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக தொண்டு நிறுவனங்கள்,  மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரி,  பட்டணம் ஆனந்தா கல்வி நிறுவனங்களும் இணைந்து விழிப்புணர்வுப் பேரணி நடத்தின.  இந்த விழிப்புணர்வுப் பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,  துணி மற்றும் காகிதப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு பட்டணம் பகுதியின் முக்கிய வீதிகள் வழியே சென்று மாணவ, மாணவியர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.  மேலும் தனியார் கல்லூரிதுறைத் தலைவர் சரவணன்,  கண்ணன்,  பள்ளித் தாளாளர் சக்திவேல்,   பட்டணம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் பொன். நல்லதம்பி,  அதிமுக பேரூர் செயலாளர் பாலசுப்பரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக, பேரணியை முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் ப.தா.முத்து கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments