காவிரியில் தண்ணீர் வரத்து குறைவு: மணல் எடுக்கும் பணி மீண்டும் தொடக்கம்
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, மோகனூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, மோகனூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. எதிர்ப்புகளை சமாளிக்க மணல் குவாரி அமைந்துள்ள குன்னிபாளையம் கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் கடும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில், இப்போது சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடல் போல் காட்சியளித்த காவிரி ஆற்றில் தற்போது மணல் திட்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. தண்ணீரும் ஆற்றில் ஆங்காங்கே வாய்க்காலில் ஓடுவது போல் ஓடுகிறது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியில் ஆற்றின் இரு பகுதியிலும் மணல் குவிந்து காணப்படும் நிலையில், ஆற்றின் மையப் பகுதியில் மட்டும் தண்ணீர் செல்கிறது. ஆற்றில் தண்ணீரின் வேகம் குறைந்துள்ளதால், ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வேகம் குறைந்துள்ளதால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மோகனூர் சர்க்கார் மணப்பள்ளி குன்னிபாளையம் அரசு மணல் குவாரியில் மீண்டும் மணல் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
அப் பகுதியில் மணல் எடுக்க அக் கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் அசம்பாவிதம் நேராமல் இருப்பதற்காக குன்னிபாளையம் கிராமம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.