நைட் கிளப்பில் அடிதடி: இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் கைது!
இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் (31 வயது) நைட் கிளப்பில் அடிதடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அவர் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஆலி ராபின்சன் தேர்வானார்.
கடந்த சனிக்கிழமை டெர்பிஷயர் நைட்கிளப் ஒன்றில் அடிதடியில் ஈடுபட்டதால் பிரைடன் கார்ஸை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இது குறித்து டெர்பிஷயர் காவல்துறையினர், “சனிக்கிழமை இரவு 30 வயதான நபர் ஒருவர் குடித்துவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த இடத்தை விட்டு விலகுகிறேன் எனக் கூறியதால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்” எனக் கூறியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆக.27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரைடன் கார்ஸ் நீக்கப்பட்டு அவர் மீதான புகாரை விசாரிப்பதாக ஈசிபி தெரிவித்துள்ளது.
முன்னதாகவும் பென் ஸ்டோக்ஸ் இது போன்ற பிரச்னையில் சிக்கியதுண்டு. மீண்டும் இங்கிலாந்து வீரர்கள் இந்த சச்சரவில் தொடர்ச்சியாக சிக்குவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை பெரிதாக பாதித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் கடந்த ஜூனில் தனது ஓய்வை அறிவித்தார். மெக்கல்லம் தனது டெஸ்ட் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்தார்.
England quick Brydon Carse axed after being handcuffed at nightclub
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.