FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளதைப் பற்றி...

பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லேயில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஆலி ராபின்சன் தலா 5 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement

Advertisement

அதைத்தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 82 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 91 (13 பௌண்டரிகள்), ஜோர்டான் 73 (14 பௌண்டரிகள்), ஜோ ரூட் (10 பௌண்டரிகள்) 66 ரன்கள் எடுத்தனர். பின், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 89.5 ஓவர்களில் 409 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

பாகிஸ்தான் சார்பில் சுழல்பந்துவீச்சாளர் அலி உஸ்மான் 5 விக்கெட்டுகளும், குர்ரம் ஷேஷாத் 3 விக்கெட்டுகளும், அப்பாஸ், முகமது அலி இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி தன்னுடைய இண்டாவது இன்னிங்ஸில் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆட்டம் தொடங்கியதுமே ரன்கள் ஏதுமின்றி பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸான் அவாய்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்களால், இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸை போலவே ஆலி ராபின்சனுடன், ஜோஷ் டங்குடன் சேர்ந்து ஆர்ச்சரும் தாக்குதலைத் தொடர்ந்தார்.

இங்கிலாந்து வேகத்தைத் தாங்காமல் பாகிஸ்தான் அணி 37.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 41 ரன்களும், ஷான் மசூத் 29 ரன்களும் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஷ் டங், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆலி ராபின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆலி ராபின்சன் ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார். 5 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்தது.

இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் வருகிற ஆக. 27 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது.

summary

England wrapped up an innings win over Pakistan inside three days in the first test on Friday, delivering a strong start to the post-Bazball era under returning captain Joe Root. Dismissed for 409 around 40 minutes into day three, England took a 238-run advantage into the second innings and skittled Pakistan for 135 in 37.3 overs before tea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments