சாலை மேம்பாட்டுப் பணிகள்: அதிகாரி ஆய்வு
நாமக்கல் மற்றும் பரமத்தி பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் அண்மையில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மற்றும் பரமத்தி பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் அண்மையில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் உட்கோட்டத்தில் பழுதாகி இருந்த வீசாணம்-வேட்டாம்பாடி சாலை மேம்படுத்தும் பணி மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், பரமத்தி உட்
கோட்டத்திலும் பல்வேறு இடங்களில் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையின் சேலம் கண்காணிப்புப் பொறியாளர் ஜெ.கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின் போது நாமக்கல் கோட்ட பொறியாளர் சசிக்குமார் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.