FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்செங்கோட்டில் ரிக் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம், தென்மண்டல விவசாய ரிக் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம், தென்மண்டல விவசாய ரிக் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத் தலைவர் கந்தசாமி, லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பாரி.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, வேலகவுண்டன்பட்டி, கந்தம்பாளையம், ஆத்தூர், சேலம், ஆகிய பகுதிகளில் இருந்து ரிக் உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்கள் பேசியது: டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ரிக் மற்றும் லாரி தொழில் பொருளாதார ரீதியாக பலத்த பின்னடைவைச் சந்தித்து வருகிறது. தொழில் மிகவும் நலிவடைந்து இத்தொழிலைச் சார்ந்து இருக்கும் ரிக் வண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானவர்களை பாதித்து வருகிறது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வாடகைக் கட்டணத்தை உயர்த்த முடிவதில்லை. டீசல் விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் மாவட்டம் முழுவதும் இரு நாள்கள் இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments