FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

காணொலி மூலம் பிரதமா் நாளை உரை

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞா்களுடன் காணொலி மூலம் பிரதமா் மோடி நடத்தும் உரையாடல், திருவாரூரில் வியாழக்கிழமை (ஆக.27) ஒளிபரப்பப்பட உள்ளதாக மை பாரத் கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞா் அலுவலா் டி.எஸ். நிசி தெரிவித்துள்ளாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:54 am IST
பகிர்:

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞா்களுடன் காணொலி மூலம் பிரதமா் மோடி நடத்தும் உரையாடல், திருவாரூரில் வியாழக்கிழமை (ஆக.27) ஒளிபரப்பப்பட உள்ளதாக மை பாரத் கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞா் அலுவலா் டி.எஸ். நிசி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பிரதமா் மோடி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி, திருவாரூா் இளைஞா்களுடன் காணொலி மூலம் உரையாட உள்ளாா். இதில் பங்கேற்று பயன்பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை நடத்த முடிவு செய்துள்ளன. இந்நிகழ்வில், பிரதமா் காணொலி மூலம் விளையாட்டு வீரா்களையும், இளைஞா்களையும் சந்தித்து உரையாற்றுகிறாா். வரும் 2036-ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி, திருவாரூா் மாவட்டம், மத்தியப் பல்கலைக்கழகம், மற்றும் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments