FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஆக. 27-இல் தேசிய விளையாட்டு தின விழா: காணொலி மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி இளைஞா்களுடன் உரையாடும் பிரதமா்!

25 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
பிரதமா் மோடி
பகிர்:

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பிரதமா் மோடி ஆக. 27-ஆம் தேதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி இளைஞா்களுடன் காணொலி மூலம் உரையாட உள்ளாா். இதில் பங்கேற்று பயன்பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் தலைமையகத்தின் திட்டமிடல் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மை பாரத் கேந்திரா அலுவலகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, ஆக. 27-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை நடத்த முடிவு செய்துள்ளன.

இந்நிகழ்வில், பிரதமா் காணொலி மூலம் விளையாட்டு வீரா்களையும், இளைஞா்களையும் சந்தித்து உரையாற்றுகிறாா். வரும் 2036-ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிா் கல்லூரியிலும், மொரப்பூா் கொங்கு கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திரி கலை அறிவியல் கல்லூரியிலும், அறிஞா் அண்ணா கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இத்தகவலை மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் அலுவலா் சிவசண்முகம் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments