FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ.18.93 லட்சத்து கொப்பரை ஏலம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:39 am IST
பகிர்:

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை ரூ.18.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டுவருகின்றனா்.

இங்கு தரத்திற்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 10 ஆயிரத்து 360 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.234.99 க்கும், குறைந்தபட்சமாக 228.19க்கும், சராசரியாக ரூ.234.89க்கும் ஏலம் போனது.

Advertisement

Advertisement

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.226.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.160.99 க்கும், சராசரியாக கிலோ ரூ.224.19 க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ.23,01,888 க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 646 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 225.69-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 206.99க்கும், சராசரியாக ரூ. 224.69க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.205.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.151.55க்கும், சராசரியாக கிலோ ரூ. 200.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.18 லட்சத்து 93 ஆயிரத்து 387க்கு கொப்பரை ஏலம் போனது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments