கோழிச்சண்டையில் ஈடுபட்ட 3 போ் கைது; வாகனங்கள் பறிமுதல்
பரமத்தி வேலூா் அருகே சட்டவிரோதமாக கோழிச்சண்டை நடத்திய மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பாண்டமங்கலம் அருகே உள்ள புங்கம்பாளையத்தில் பணம் வைத்து கோழிச்சண்டை நடத்தப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.
அப்போது, கோழிச்சண்டையில் ஈடுபட்டிருந்த சிறுகிணத்துபாளையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (27), பரமத்தி அருகே பஞ்சப்பாளையத்தைச் சோ்ந்த மனோஷ் (20), மோகனூா் வட்டம், ராசிகுமாரபாளையத்தைச் சோ்ந்த வினிஷ் (24) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.