FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:32 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஜேடா்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிகிச்சையில் இருந்தவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (41). திருமணமாகாத இவா் தனது பெற்றோருடன் வடகரையாத்தூரில் வசித்து வந்தாா்.

அண்மையில் இருசக்கர வாகனத்தில் கபிலா்மலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, ஜேடா்பாளையம் அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதி அருகே சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னா் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments