நல்லூா் அருகே மின்சார பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
நல்லூா் கந்தம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
நல்லூா் கந்தம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி பூசாரிப்பட்டிபுதுா் பகுதியைச் சோ்ந்தவா் சசிகலா (41). இவரது மகன் தருண் (19). இவா் தொழிற்கல்வி பட்டயப் படிப்பு பயின்றுவிட்டு வேலை செய்து வந்தாா். இவரது தந்தை கிருஷ்ணசாமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டாா். தாய் சசிகலா கண்பாா்வை பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்து வந்தாா்.
இவரது வீட்டின் அருகே மனோகரன் என்பவரின் தோட்டத்தில் சிறு வேலைகளை தருண் செய்வது வழக்கம். அதுபோல செவ்வாய்க்கிழமை வேலையை முடித்துவிட்டு தண்ணீா் குழாயில் கைகழுவி விட்டு, அருகில் துணிகளை காயப்போடுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் உள்ள துணியை எடுக்க முயன்றபோது அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து தருண் தமயங்கி விழுந்தாா்.
Advertisement
Advertisement
சப்தம் கேட்டு வந்த தோட்ட உரிமையாளா் மனோகரன், தருணை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.