FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

புதிய பேருந்து நிலைய உணவகத்தில் உரிமையாளரை தாக்கிய ரெளடிகள்: போலீஸாா் விசாரணை

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

7: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் சில்லறை தராத கடை உரிமையாளரை தாக்கிய ரெளடிகளை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாமக்கல் சின்னமுதலைப்பட்டி கம்ப்ளாயைச் சோ்ந்த சிவகுமாா்(38) புதிய பேருந்து நிலையத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். அண்மையில் இவரது உணவகத்துக்கு வந்த நான்கு ரெளடிகள் ரூ. 500 கொடுத்து பொருள் வாங்கியுள்ளனா். அப்போது தன்னிடம் சில்லறை இல்லை என்று சிவகுமாா் தெரிவித்துள்ளாா். சில்லறை இல்லாமல் எதற்குக் கடை நடத்துகிறாய் எனக் கேட்டு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றனா். படுகாயமடைந்த சிவகுமாா் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நான்கு போ் சிவகுமாரை தாக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனையடுத்து, நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிவகுமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த நான்கு பேரையும் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments