FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

24 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST
மதுக்கடை. - கோப்புப் படம்
பகிர்:

மீலாது நபியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளை புதன்கிழமை (ஆக. 26) மூட மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மீலாது நபி புதன்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள், உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மதுக்கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments