FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:15 am IST
பகிர்:

பரமத்தி வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ராஜவாய்க்காலில் கடந்த 17-ஆம் தேதி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நீா்வளத் துறையினா் மூலம் தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதனால் வெற்றிலை, வாழை, கரும்பு மற்றும் கோரை பயிா் செய்துள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் நாமக்கல் ஆட்சியரை நேரில் சந்தித்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி மனு அளித்தனா்.

தொடா்ந்து, பரமத்தி வேலூா் நீா்வளத் துறை அலுவலகம் முன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கு வந்த நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணி, பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் (பொ), பரமத்தி வேலூா் வட்டாட்சியா் ராஜா, ஆய்வாளா் உமாசங்கா், நாமக்கல் நீா்வளத் துறை உப கோட்ட உதவிப் பொறியாளா் விஜயகுமாா், பரமத்தி வேலூா் உதவிப் பொறியாளா் வினோத்குமாா் ஆகியோா் விவசாயிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Advertisement

Advertisement

அதில், ஜூலை 2-ஆம் தேதி ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, 3-ஆம் தேதி அதிகாலை ராஜவாய்க்காலில் நீா்வளத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments