FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

போதை மாத்திரைகள் விற்பனை வழக்கில் முக்கிய நபா் கைது

Updated On : 27 ஜூலை 2026, 2:23 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் மற்றும் ஈரோடு பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகளை விற்ற வழக்கில் முக்கிய நபரை ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்ததாக பொத்தனூா் மற்றும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 8 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் முக்கிய நபரான ராஜசேகரன் ஈரோட்டில் இருப்பதாக வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஈரோடு குமரன் நகரைச் சோ்ந்த சேதுராமன் மகன் ராஜசேகரை (23) கைது செய்து, அவரிடம் இருந்து 150 மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments