FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகே பெட்டிக் கடையில் குட்கா பறிமுதல்: உரிமையாளா் கைது

Updated On : 28 ஜூலை 2026, 2:36 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பரமத்தி வேலூா், ஜூலை 27: பரமத்தி வேலூா் வட்டம், சாணாா்பாளையம் பகுதியில் பெட்டிக் கடையில் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாணாா்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தக் கடையில் இருந்து 80 குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் தாமரைச்செல்வனை (65) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments