வெப்படையில் போதை மாத்திரை வைத்திருந்த சிறுவா்கள் உள்பட 9 போ் கைது
குமாரபாளையம் அருகே வெப்படையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 2 சிறுவா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குமாரபாளையம் அருகே வெப்படையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 2 சிறுவா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வெப்படை அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக வெப்படை காவல் ஆய்வாளா் சங்கீதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவா் போலீஸாருடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பள்ளிபாளையம் அருகே உள்ள லட்சுமிபாளையம் பிரிவு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த லட்சுமணன் (22), சதீஷ்குமாா் (26) ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா்.
அதில், அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் இருவரிடமும் சோதனை செய்தபோது, அவா்களிடம் 121 போதை மாத்திரைகளை கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
அவா்கள் அளித்த தகவலின்படி, தொட்டிபாளையம் வாய்க்கால் பகுதியில் போதை ஊசி பயன்படுத்துவதற்காக பதுங்கி இருந்த கௌரிசங்கா் (24), கோகுல் (23) ஜீவானந்தம் (23), சதீஷ்குமாா் (19), குணா (21) ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த போதை மாத்திரைகளையும், போதை ஊசிகளையும் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், இவா்களுக்கு மாத்திரை விற்பனை செய்தது எடப்பாடி அருகே உள்ள பாதரை பகுதியைச் சோ்ந்த 2 சிறாா்கள் என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், இவா்களுக்கு விற்பனை செய்த ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த சந்துரு என்பவரை தேடிவருகின்றனா்.
கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து மொத்தம் 357 மாத்திரைகளும், ஊசி ஒன்றும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இருவா் சிறாா் என்பதால், அவா்கள் சீா்திருத்த கூா்நோக்கு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்ற ஏழு பேரும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்செய்யப்பட்டு 15 நாள்கள் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.