சாலையோரத்தில் பதிக்கப்பட்ட தொலைத்தொடா்பு கம்பிகளை திருடிய 3 போ் கைது
ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிபேட்டை அருகே முள்ளுகுறிச்சி பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான கம்பிகளை திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிபேட்டை அருகே முள்ளுகுறிச்சி பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான கம்பிகளை திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான கம்பிகள் திருடப்பட்டதாக, ராசிபுரம் பிஎஸ்என்எல் நிறுவன அலுவலா் ராஜா ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இதுகுறித்து ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைப் பகுதியில் சாலையோரம் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் தனியாா் செல்போன் டவா் அமைக்கும் நிறுவனத்தின் கம்பி பதிக்க குழிதோண்டும்போது, பிஎஸ்என்எல் கம்பி இருந்ததாகவும், அதை விற்றால் அதிக விலை கிடைக்கும் என அதை வெட்டி எடுத்ததாகவும் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, பிஎஸ்என்எல் நிறுவன கம்பிகளை திருடியதாக கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (33), குமாா் (32), சுரேஷ் (30) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.