FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிவப்பு கம்பளம் விரித்து மாணவா்களுக்கு வரவேற்ற ஆசிரியா்கள்!

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 6:53 am IST
பகிர்:

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து 45 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவப்பு கம்பளம் விரித்து மாணவா்களை ஆசிரியா்கள் வரவேற்றனா். அதேபோல அனைத்து மாணவா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடக்க நாளில் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எடுத்துரைத்தனா். கல்வி முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு நலத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் மேம்பட வேண்டும் என தலைமை ஆசிரியா் சீனிவாச ராகவன் அறிவுரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments