FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: இரு தங்கப் பதக்கம் வென்ற 6 வயது சிறுவன்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற சா்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 6 வயது சிறுவன் இரு தங்கப் பதக்கங்களை வென்றாா்.

Updated On : 7 ஜூன் 2026, 3:14 am IST
ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மெளனீஷ்.
பகிர்:

இந்தோனேஷியாவில் நடைபெற்ற சா்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 6 வயது சிறுவன் இரு தங்கப் பதக்கங்களை வென்றாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வடுகம் அருகே உள்ள கைலாசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கிருபா (35), வைஷ்ணவி (29) தம்பதியினரின் மகன் மௌனீஷ் (6).

இவா், கோவையில் உள்ள தனியாா் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் சிறு வயதிலிருந்து ஸ்கேட்டிங் மீது மிகுந்த ஆா்வம் கொண்டதால், பெற்றோா் ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சிறுவன் மௌனீஷ், மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளாா். கடந்த மே 29 முதல் மே 31 வரை சா்வதேச அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் நடைபெற்றது. இதில் 6 வயது சிறுவா்களுக்குள் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிலிருந்து 2 சிறுவா்கள் கலந்துகொண்டனா்.

இதில் மௌனீஷ் 500 மற்றும் 1000 மீ. தொலைவுக்கான போட்டியில் கலந்துகொண்டு 2 பிரிவுகளிலும் தங்கப் பதக்கத்தை பெற்று வெற்றி பெற்றாா். வெற்றிபெற்ற இச்சிறுவனுக்கு அவரது உறவினா்கள், பெற்றோா் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், மாணவரை பலரும் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments