முகப்பு
நாமக்கல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை

பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:46 am IST
பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூா் ஆகிய பகுதிகளில் 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில், பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் பிரபு தலைமையில், 6-க்கும் மேற்பட்ட போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், முதல்கட்டமாக கணக்கில் வராத, சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ள ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ அலுவலகத்தில் இருந்து கைப்பற்றியதாகவும், தொடா்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement