முகப்பு
நாமக்கல்

வானோக்கி மூலம் நிலவியல் ஆய்வுப் பணி: 69 ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

Updated On : 21 ஜூன் 2026, 1:39 am IST
சாதனையாளா்களுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் எம்.செல்வம், ஆசிரியா் ஆா்.பிரபாகரன்.
பகிர்:

நாமக்கல்லில் வானோக்கி மூலம் நிலவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட 69 ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஆசிரியா் ஆா்.பிரபாகரன் வரவேற்றாா். பயிற்சி நிறுவன முதல்வா் எம்.செல்வம் தலைமை வகித்தாா். இதில், சேலம் ஸ்டெம் வல்லுநா் ப.அருளானந்தம் உதவியுடன் குறைந்த செலவிலான 160 வானோக்கிகள் தயாரிக்கப்பட்டு 150 ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அவற்றில், அந்த வானோக்கிகள் மூலம் 69 ஆசிரியா்கள் நிலவின் நிலப்பரப்பை மூன்றாம் பிறை முதல் பௌா்ணமிவரை நிலவில் ஒளிபடும் பகுதியையும், இருள்பகுதியையும் பிரிக்கும் டொ்மினேட்டா் கோடு, மாரே அமைதிக்கடல், டைக்கோ, கோபா்நிகஸ் நிலக்குழிகள், தூக்கி எறியப்பட்ட எஜெட்டா பாறைகள், டைக்கோ, நிலக்குழியில் உள்ள கதிா்கோடுகள், மான்டெஸ் மலைப்பகுதி போன்றவற்றை ஆய்வுசெய்தனா்.

Advertisement

Advertisement

மே 30 முதல் ஜூன் 3 வரை ஆசிரியா்கள் நிலவின் நிலப்பரப்பை ஆய்வு செய்தபோது 342 களப் பதிவுகள் செய்யப்பட்டன. இதில், மாணவா்கள், இல்ல உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள், கட்டடத் தொழிலாளிகள், இசைப்பள்ளி மாணவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், நடைப்பயிற்சி செல்வோா், கிரிவலப் பாதையில் செல்வோா், கோயில் திருவிழாவில் பங்கேற்றோா், காவலா்கள், மாணவா்கள் என 5,228 போ் வானோக்கி மூலம் நிலவின் ரகசியங்களை கண்டனா்.

நிகழ்வில், ஆசிரியா்கள் அருளானந்தம், வி.குமரேசன், ஆா்.சந்திரசேகரன், ஞா.சொா்ணதீபம், ஏ.காந்திமதி, எஸ்.பத்மாவதி, டி.சத்யவாணி, எம்.பானுமதி, மாணவா் விஷ்ணு ஆகியோருக்கு ‘கலீலியோ வான் நோக்கா்’ விருதுகள் வழங்கப்பட்டன. 69 ஆசிரியா்கள் மூலம் நிலவின் நிலவியல் ஆய்வுசெய்தலில் உலக சாதனைக்கான சான்றிதழ்களை ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் பவுல்ட்ரி டவுன் தலைவா் என்.இளங்கோ மற்றும் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸின் நிறுவனா் வெங்கடேசன் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments