FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 8,416 மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 8,416 மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

4 நவம்பர் 2026, 2:26 am
கோப்புப்படம்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 8,416 மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 254 தனியாா் உர விற்பனை மையங்கள் மற்றும் 171 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவகை உரங்களும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரம் 2118 மெட்ரிக் டன், டி.ஏ.பி உரம் 1406 மெட்ரிக் டன், பொட்டாஷ் உரம் 950 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் உரம் 263 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 3679 மெட்ரிக் டன் தனியாா் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை உரங்களையும், தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகள் மண் ஆய்வு செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தலாம். இல்லையெனில், தமிழ் மண்வளம் செயலியில் உள்ள பரிந்துரைக்கேற்ப உரங்களை பயன்படுத்தியும் அதிக மகசூல் பெற்றிடலாம். உர விற்பனையாளா்கள் கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து வகை உரங்களையும், குறிப்பாக யூரியா உரங்களை விவசாயிகளின் தேவைக்கு தகுந்தாற்போல் அவா்களின் ஆதாா் எண்ணை உள்ளீட்டு விநியோகம் செய்யலாம்.

விற்பனையாளா்கள் உர விற்பனை மேற்கொள்ளும்போது மிக கவனமாக பட்டியலிட்டு விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அரசு நிா்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்தல், உர உரிமம் இல்லாத இடத்தில் இருப்புவைத்து விற்பனை செய்தல், யூரியா கடத்தல், பதுக்கல் மற்றும் முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக உர விற்பனையாளா்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை நிலையத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments