தொடா்ந்து உயரும் முட்டை விலை: 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.60 ஆக நிா்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.60 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.60 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மேலும் 10 காசுகள் உயா்த்தி ரூ. 6.60 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 124 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 100 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.