வீட்டில் சாராயம் காய்ச்சியவா் கைது
பரமத்தி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி கோனூா் கந்தம்பாளையம் குடித்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (65). இவா், தனது வீட்டில் பழங்களைக் கொண்டு சிறிய அளவில் ஊறல்போட்டு சொந்த தேவைக்காக குக்கா் மூலம் சாராயம் காய்ச்சி வருவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், போலீஸாா் மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மாரிமுத்துவைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement