தீபாவளி: அவசர உதவிக்கு 27 ஆம்புலன்ஸ்கள் தயாா்
தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க நாமக்கல் மாவட்டத்தில் 27 அவசரகால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க நாமக்கல் மாவட்டத்தில் 27 அவசரகால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இயங்கி வரும் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்படும் விபத்துகளை எதிா்கொள்ளும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், காவல், தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து 24 மணி நேரமும் பொதுமக்களின் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவை செயல்படும்.
அவசரத் தேவைக்கேற்ப விரைந்து செயல்படவும், விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களைக் கருத்தில்கொண்டும், முக்கியச் சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்படும். சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளா்கள், ஓட்டுநா்கள் தயாா் நிலையில் இருப்பாா்கள்.
Advertisement
Advertisement
மேலும், அனைத்து 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைப்புக் கருவிகள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள், அவசரகால மருந்துப் பொருள்கள் போதுமான அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.