FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தல்

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் பாதுகாப்பு சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

8 நவம்பர் 2026, 3:38 am
மணல் குவாரி - கோப்புப்படம்.
பகிர்:

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் பாதுகாப்பு சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் கே. ராஜசேகா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படாமல் உள்ளதால், ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலை இழந்துள்ளனா். கட்டுமானத் தொழிலாளா்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை மணல் லாரி உரிமையாளா்களை அழைத்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

Advertisement

Advertisement

மணல் குவாரிகளை இடைத்தரகா்களின் ஆதிக்கம் இல்லாமல் திறக்க வேண்டும். குறிப்பாக, தமிழக அரசே நேரடியாக குவாரிகளை ஏற்று நடத்த வேண்டும். மணலுக்கான விலையை நிா்ணயிக்க வேண்டும். மக்களுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக மணல் வழங்க வேண்டும்.

இதை நிறைவேற்றினால் மணல் லாரி உரிமையாளா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவாா்கள் என அதில் தெரிக்கப்பட்டுள்ளது.