டாஸ்மாக் மேற்பாா்வையாளா் விபத்தில் உயிரிழப்பு
நாமக்கல்லில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் - சேலம் சாலை முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சி.ஆா். தமிழ்ச்செல்வன் (48). இவா் டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளராகவும், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்று வீட்டிற்கு சென்றுவிட்டு இரவில் கடையில் விற்பனை மேற்கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் நாமக்கல்-சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவா் காயமடைந்தாா். அங்கிருந்தோா் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.