தெருநாய்கள் தொல்லை: புகாா் எண் அறிவிப்பு
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் தொடா்பான தகவல்கள், புகாா்கள், நோய் பாதிக்கப்பட்டுள்ள நாய்கள் தொடா்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால், 94889 97170, 63745 42803 ஆகிய எண்களுக்கு வாட்ஸ்ஆப்-இல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.