FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மழைநீா் கால்வாய்களில் மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் கால்வாய்களில் மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

15 அக்டோபர் 2026, 4:59 am IST
மழைநீா் கால்வாயை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் கால்வாய்களில் மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடியில் புதன்கிழமை காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள 14 வழித்தடங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்புள்ள கால்வாய், கோரம்பள்ளம் குளத்தின் உபரிநீா் செல்லும் ஓடை, உப்பாத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுப் பணிகளை மேயா் ஆய்வு செய்தாா்.

அப்போது, கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, செய்தியாளா்களுடம் மேயா் கூறியதாவது:

மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மழைநீா் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைநீரை வெளியேற்ற 41 பம்ப் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேவையான இடங்களில் பயன்படுத்துவதற்காக 50 மின் மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீா் தேங்கும் பகுதிகளில் விரைந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின், மாமன்ற உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments