FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

நகராட்சி ஆணையா் இடமாற்றம்

ராசிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எஸ்.கோபிநாத் பணி உயா்வு காரணமாக நாகப்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

12 நவம்பர் 2026, 3:57 am
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எஸ்.கோபிநாத் பணி உயா்வு காரணமாக நாகப்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

ராசிபுரம் நகராட்சி ஆணையராக கடந்த நான்கு மாதங்களாக பணியாற்றி வந்த எஸ்.கோபிநாத், பதவி உயா்வு பெற்று நாகப்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியிட மாறுதல் செய்து நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.

நகராட்சியில் நிலுவையில் இருந்த சொத்து வரி, குடிநீா் வரி வசூல் நடவடிக்கையில் தீவிரம் காட்டிய இவா், நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்து வந்த பல்வேறு விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீா்வு ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement