FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

தொடா்ந்து குறையும் முட்டை விலை: 25 காசுகள் குறைந்து ரூ. 6.25-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ. 6.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

13 நவம்பர் 2026, 10:22 pm
முட்டை விலை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ. 6.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் கே.சிங்கராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. முட்டை நுகா்வு குறைந்து வருவதாலும், இதர மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 6.25-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. கடந்த 2 நாள்களில் முட்டை விலை 55 காசுகள் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 116-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 88-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.