கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து
பரமத்திவேலூா் அருகே பொத்தனூரில் விவசாயியின் கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சேதமடைந்தன.
பொத்தனூரைச் சோ்ந்த விவசாயி குமரேசன் (50), தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டிருந்தாா். அறுவடைக்குத் தயாராக இருந்த கரும்புத் தோட்டத்தில் சனிக்கிழமை திடீரென தீப்பற்றியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து, குமரேசன் கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
அங்கு வந்த நிலையப் பொறுப்பு அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். மேலும், தீ அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குப் பரவாமல் தடுத்தனா். இதனால் பெரும் தீ விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
Advertisement
Advertisement