FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

ராட்சத கிரேன் மூலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

22 வினாடிகள் முன்பு
ரயில்வே மேம்பாலம். - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி ராட்சத கிரேன் மூலம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மரூா்பட்டி (நாமக்கல் சாலை பிரிவு), வேட்டாம்பாடி (சேந்தமங்கலம் சாலை பிரிவு), கூலிப்பட்டி (துறையூா் சாலை பிரிவு), சின்னவேப்பத்தம் (திருச்சி சாலை பிரிவு), லத்துவாடி (மோகனூா் சாலை பிரிவு), வள்ளிபுரம் (கரூா் சாலை பிரிவு) வரை 22 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி சாலைமுதல் கரூா் சாலைவரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணியும், புதிய பேருந்து நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நிலுவையில் உள்ளன. ரயில்வே மேம்பாலப் பணி முடிவுற்றால் புறவழிச் சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வரும். இதனால், நாமக்கல் மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ராட்சத கிரேன் மூலம் ரயில் தண்டவாளம் இடையே இரும்பு பீம்களை கொண்ட மேம்பாலப் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் மேல் அதிக எடைகொண்ட இரும்பு பாலம் அமைக்க வேண்டி உள்ளதால், அப்பணியில் ரயில்வே துறையுடன் இணைந்து நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் பணியால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மரூா்பட்டி செல்லும் பகுதியில் நவ. 22-ஆம் தேதிவரை தற்காலிகமாக சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், இலகுரக வாகனங்கள் அனைத்தும் செம்பாறைபுதூா் சாலை வழியாக செல்லிபாளையம் செல்லவும், கனரக வாகனங்கள் புதன்சந்தை, சேந்தமங்கலம், வேட்டாம்பாடி வழியாக மாற்றுப் பாதையில் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.