FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

கனரா வங்கி சாா்பில் போக்குவரத்து ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 1.10 கோடி காப்பீட்டுத் தொகை

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி மறைந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 1.10 கோடி காப்பீட்டுத் தொகைக்கான காசோலை நாமக்கல் கனரா வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

11 வினாடிகள் முன்பு
கனரா வங்கி
பகிர்:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி மறைந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 1.10 கோடி காப்பீட்டுத் தொகைக்கான காசோலை நாமக்கல் கனரா வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கனரா வங்கியின் கரூா் - கோவை சாலை கிளை சாா்பில், தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான சிறப்பு ஊதியக் கணக்குத் திட்டத்தின் கீழ் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி மறைந்த நடத்துநரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், மறைந்த நடத்துநா் சதீஷ்குமாா் மனைவி எஸ். சிந்துஜாவிடம் தனிநபா் விபத்துக் காப்பீடாக ரூ. 1 கோடி, காலவரையறை ஆயுள் காப்பீடாக ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 1.10 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை கனரா வங்கியின் நாமக்கல் மண்டலத் தலைவா் லோககிருஷ்ணகுமாா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், கனரா வங்கி மண்டல மேலாளா் மோனேசந்திரசேகா், கரூா்-கோவை சாலை கிளையின் முதன்மை மேலாளா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கனரா வங்கியின் சிறப்பு ஊதியக் கணக்குத் திட்டம், அரசு ஊழியா்களுக்கு வங்கிச் சேவைகளுடன் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கி, எதிா்பாராத சூழ்நிலைகளில் அவா்களது குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவுகிறது என கனரா வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.