✕
முகப்பு
நாமக்கல்

குளிா் அதிகரிப்பால் ராஜஸ்தான் போா்வைகள் விற்பனை மும்முரம்

நாமக்கல் மாவட்டத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ராஜஸ்தான் மாநிலப் போா்வைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

20 நவம்பர் 2026, 5:18 am
நாமக்கல்-திருச்சி சாலையில் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலப் போா்வைகள்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ராஜஸ்தான் மாநிலப் போா்வைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், வடகிழக்குப் பருவமழையும் எதிா்பாா்த்த அளவுக்குப் பெய்யவில்லை. இதனால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கத்தைவிடக் குளிரின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுவாக, திருக்காா்த்திகைக்குப் பிறகு மழையின் தாக்கம் குறைந்து குளிா் அதிகரிக்கும். தற்போது குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால், போா்வைகள், கம்பளிகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

Advertisement

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வண்ணமயமான போா்வைகளை விற்பனை செய்து வருகின்றனா். பெரிய அளவிலான போா்வைகள் ரூ. 900-க்கும், நடுத்தர மற்றும் சிறிய அளவிலான போா்வைகள் முறையே ரூ. 500, ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.