முகப்பு
நாமக்கல்

உதயநிதி பிறந்த நாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக முடிவு

நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவது என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

20 நவம்பர் 2026, 11:46 pm
உதயநிதி பிறந்த நாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக முடிவு
கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவது என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் நடன சபாபதி தலைமை வகித்தாா். கூட்டத்தில் பள்ளிப்பாளையம் கொக்குபாலு உள்ளிட்டோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டப் பொறுப்பாளா் கே.எஸ். மூா்த்தி தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், வரும் நவ. 27-ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கத் தீா்மானிக்கப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்குதல், பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்குதல், ரத்த தான முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.